
– பாறுக் ஷிஹான் –
தெஹியத்தகண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவரை – லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில், லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.
தெஹியத்தகண்டிய பகுதியை சேர்ந்த நபர், கொழும்பிலுள்ள லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக தெஹியத்தகண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஆகியோரை, ரூபா 50000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்தனர்.
நேற்று (10) மாலை கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சந்தேக நபர்களும், தெஹியத்தகண்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக விசாரணைகளை நிறைவு செய்ததன் பின்னர் – இன்று (11) நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகாக ஆஜர்படுத்தப்படுகின்றனர்.


