தேர்தல்கள் எவையும் இந்த வருடம் இல்லை: அமைச்சர் யாப்பா

🕔 March 2, 2016

Laxman yapa abewardana - 098தேர்தல் எவையும் இந்த வருடம் நடைபெறாது என்று, ராஜாங்க நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

குறிப்பாக, உள்ளுராட்சி சபைக்கான தேர்தல்கள் எவையும் இடம்பெறாது என்று அவர் குறிப்பிட்டார்.

ஊடக சந்திப்பொன்றில் பேசும்போதே அவர் இதனைக் கூறினார்.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பில் ஏராளமான முறைப்பாடுகள் உள்ளன. அவை தொடர்பில் எல்லை நிர்ணய ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆயுட்காலம் நிறைவடைந்த உள்ளுராட்சி நிறுவனங்கள் தற்போது விசேட ஆணையாளர்களின் அதிகாரத்தின் கீழ் இயங்கி வரும் நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் மற்றைய உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவுக்கு வருகின்றன.

இந்த நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறு கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஆயினும், இந்த வருடம் தேர்தல்கள் எதுவும் நடைபெறாது என்று ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்