தலைப்புச் செய்திகள்

பாகிஸ்தான் பள்ளிவாசலில் நடந்த தற்கொலைத் தாக்குதலில், கொல்லப்பட்டோரின் இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்பு

பாகிஸ்தான் – இஸ்லாமாபாத்தில் நேற்று (06) வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, ​​நகரத்தில் உள்ள ஷியா பள்ளிவாசலில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் பலியானவர்களை அடக்கம் செய்ய – பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர்.

இந்த தாக்குதலில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டதோடு,170 பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று சனிக்கிழமை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இறந்தவர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன.

இதேவேளை, வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பெஷாவர் நகரில், தற்கொலை குண்டுதாரிகள் மறைந்திருந்தார்கள் எனக் கூறப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தின் புறநகரிலுள்ள தர்லாய் கலன் பகுதியில் அமைந்துள்ள கதீஜா துல் குப்ரா பள்ளிவாசலில் சக்திவாய்ந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எல் ஆயுதக் குழு இதனைப் பொறுப்பேற்றது.