
தபால் திணைக்களம் – நாளை திங்கள்கிழமை (09) தொடக்கம் தபால் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, குறைந்தபட்ச தபால் கட்டணம் ரூ. 70 ஆக உயர்த்தப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட கட்டண அமைப்பு உடனடியாக அமுலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தபால் சேவை கட்டணங்களின் பரந்த திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மேலதி கட்டண மாற்றங்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

நாளை முதல் தபால் சேவைகளைப் பயன்படுத்தும் போது, புதிய கட்டணங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு தபால் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.


