தலைப்புச் செய்திகள்

சமல் ராஜபக்ஷவின் இளைய மகனைக் கைது செய்யுமாறு உத்தரவு

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்யுமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (சிஐடி) உத்தரவிட்டுள்ளது.

அவர் தற்போது அமெரிக்காவில் உள்ளார். இந்த நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிஐடி-க்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏர்பஸ் விமான வழக்கில் – ஷமிந்திர ராஜபக்ஷ சந்தேக நபராகப் பெயரிடப்பட்டதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.