
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கான நிதி ஒதுக்கீடுகள் – அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தால் வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவைப் பெற்ற அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும்.

மேலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்துத் தெரிவித்த வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் 25,000 ரூபா நிதி உதவி வழங்கப்படும்.


