
பெரியளவிலான கஞ்சாத் தோட்டமொன்று, ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுக்தென்ன காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
பண்டாரவளை பிரிவு – குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் தியதலாவ முகாம் ராணுவத்தினர் இணைந்து நடத்திய தேடுதலில் இந்த கஞ்சாத் தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பல கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டன.
-2.5 ஏக்கர் பரப்பளவில் இரண்டு கஞ்சாத் தோட்டங்கள்
– 02 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஒரு தோட்டம்
– 01 ஏக்கர் பரப்பளவில் ஒரு தோட்டம்
– 0.5 ஏக்கர் பரப்பளவில் ஒரு தோட்டம்
– 0.25 ஏக்கர் பரப்பளவில் ஒரு தோட்டம் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், சுமார் 115 கிலோகிராம் உலர்ந்த கஞ்சாவும் இந்த நடவடிக்கையின் போது மீட்கப்பட்டது.
நீதிமன்ற சாட்சியங்களுக்காக மாதிரிகள் பெறப்பட்ட பிறகு, முழு கஞ்சா தோட்டமும் தீ வைத்து எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் சோதனைக்கு முன்னர் அப்பகுதியை விட்டு ஓடிவிட்டனர், மேலும் பொறுப்பானவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.



