
11 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் கஞ்சா அடங்கிய சூட்கேஸ் பெட்டியொன்று – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உரிமை கோரப்படாத அல்லது விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்த பொருட்களளைக் கொண்டுள்ள ஒரு களஞ்சியசாலையில் இந்த சூட்கேஸ் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 17 அன்று தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த ஒரு பயணி – இந்த சூட்கேஸ் பெட்டியை கைவிட்டுச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சூட்கேஸினுள் 11 கிலோகிராமுக்கு மேல் எடையுள்ள போதைப்பொருள், பொலிதீன் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் கணிசமான அளவு குஷ் கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


