
கைது செய்யப்படாமல் தப்பித்து – தற்போது மத்திய கிழக்கில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரிகள் 07 பேர், சரணடைய ஒப்புக்கொண்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில் இந்தத் தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அண்மையில் இந்தோனேசியாவில் வைத்து கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பதாள உலகத்தவர்கள் பலரை, இலங்கை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது,


