
க.பொ.த உயர்தர பரீட்சை இன்று (11) காலை 8:30 மணிக்கு ஆரம்பித்துள்ளது. டிசம்பர் 05ஆம் திகதி நிறைவடையும்.
இந்த ஆண்டுக்கான இந்தப் பரீட்ச நாடு முழுவதும் 2,362 மையங்களில் நடைபெற்று வருகிறது.
246,521 பாடசாலை விண்ணப்பதாரிகள் உட்பட மொத்தம் 340,525 பரீட்சார்த்திகள் இம்முறை இந்தப் பரீட்சையை எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்தனர்.

அனைத்து பரீட்சார்த்திகளும் தங்களுக்கான பரீட்சை தொடங்கும் நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக அந்தந்த பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டுமென பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


