தலைப்புச் செய்திகள்

ஆழ்கடலில் சிக்கிய 500 கோடி ரூயாய்க்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்கள்: கடற்படை அதிரடி

மேற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் கைப்பற்றிய பல நாள் மீன்பிடி படகொன்றிலிருந்து 350 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆழ்கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மேற்படி படகு, ஆய்வுக்காக டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அதில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

போதைப்பொருள் கொண்டு சென்ற சந்தேகத்தின் பேரில் – மேற்படி படகு பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த விசாரணைகளில் 350 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகியவை படகில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் பெறுமதி சுமார் 05 பில்லியன் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டமையை பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கை பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை இலக்காகக் கொண்ட கடற்படையின் தீவிரப்படுத்தப்பட்ட கடல்சார் கண்காணிப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.