
ஆயுர்வேத வைத்திய சேவைக்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பட்டதாரிகள் என, 303 பேர்நியமிக்கப்பட உள்ளனர்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நாளை (3) கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், இவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
உள்ளூர் ஆயுர்வேத சுகாதாரத்தை வலுப்படுத்துவதையும், நோயாளிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாக இந்த நியமனம் அமைவுள்ளது.
2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆயுர்வேதத் துறைக்கு மேற்கொள்ப்படும் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு இது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் மூத்த ஆயுர்வேத நிபுணர்களின் கீழ் விரிவான பயிற்சியைப் பெற்றுள்ளனர், மேலும் சிறுநீரகம் தொடர்பான நிலைமைகள் உட்பட தொற்று மற்றும் தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக கவனம் செலுத்தி, நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு மற்றும் மாகாண ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.


