தலைப்புச் செய்திகள்

பாடசாலை நேரம் அதிகரிப்பதால், ஆசிரியர்களின் பணிச்சுமை குறையும்: கல்வி பிரதியமைச்சர்

பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீட்டிப்பதன் மூலம் பாடசாலை நேரத்திற்குப் பிந்தைய ஆசிரியர்களின் பணிச்சுமையை மட்டுமே குறைக்க முடியும் என்று கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தொகுதி முறை (Module system) அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஆசிரியர்களின் பணிச்சுமை பாடசாலை நேரத்திற்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

“முன்னர், ஆசிரியர்கள் பாடசாலை நேரத்திற்குப் பிறகு வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் செல்லப்படும் பணிச்சுமையை எதிர்கொண்டனர். ஆனால் தொகுதி முறையின் கீழ் (Module system), பெரும்பாலான பணிகள் பாடசாலை நேரங்களில் மேற்கொள்ப்படும். இதனால், பாடசாலை நேரத்திற்குப் பிந்தைய – ஆசிரியர்களின் பணிச்சுமை குறையும்” என்று அவர் விளக்கினார்.

பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீடிக்கப்பட்ட பிறகு, ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி வழங்கப்படும் என்றும், அதே நேரத்தில் பணிச்சுமையும் குறைக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் உறுதியளித்தார்.

“இந்த சீர்திருத்தங்கள் மூலம் கல்வித் துறையில் மிகவும் பயனுள்ள மாற்றம் ஏற்பட்டு வருவதாக நான் நினைக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன ஊடகங்களுக்கு இந்த விடயங்களைத் தெரிவித்தார்.