தலைப்புச் செய்திகள்

அரச வீட்டிலிருந்து வெளியேறுகிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு, கொழும்பில் – அரசு வழங்கிய உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்யும் சட்டம் அமுலுக்கு வந்ததையடுத்து, அவர்களுக்கு அரசு வழங்கிய வீடுகளை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சந்திரிக்காவுக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக, அவர் வீட்டைக் காலி செய்வதற்கான கால எல்லை நொவம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே அவர் தனக்கான அரச வீட்டை விட்டு வெளியேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அடுத்த சில நாட்களுக்குள் அவர் தனது இல்லத்தை முழுமையாக காலி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறத.