தலைப்புச் செய்திகள்

பத்தேகம பிரதேச சபை பிரதித் தவிசாளர் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்

பத்தேகம பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் சமன் சி. லியனகே, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது மனைவியுடன் அவர் நேற்று (23) வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​பத்தேகம – கொடகந்த பகுதியில் வீதியை மறித்த ஒரு குழுவினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதித் தவிசாளர் லியனகே – தற்போது காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தாக்குதல் தொடர்பாக போத்தல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்தேகம பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரால் – இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.