தலைப்புச் செய்திகள்

இந்தியாவுக்கு செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியவர் படகுடன் கைது

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வண்டி – படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவினார் எனும் கூறப்படும் ஒருவரை கொழும்பு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது.

யாழ்ப்பாணம் அரலிதுடுவ கடற்கரைப் பகுதிக்கு அருகில் வைத்து – ஒரு படகுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று, பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரின் உறவினரும் கூட்டாளியுமான ஆனந்தன் என்பவரை விசாரித்த பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் படகு ஆனந்தனுக்குச் சொந்தமானது என்றும் அதில் 400 குதிரைத்திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் ஆனந்தனின் உதவியாளராகச் செயல்பட்டதாகவும், யாழ்ப்பாணம் வழியாக, இந்தியாவுக்கு செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.