
நாட்டில் இம்மாதம் 18ஆம் திகதி முதல் இன்று 21ஆம் திகதி வரை ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
அனுராதபுரம் மற்றும் கேகாலை மாவட்டங்களில் நீரில் மூழ்கி – இவர்கள் இறந்தனர் என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக 16 மாவட்டங்களில் 187 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக 152 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


