
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாசவை, இன்று (16) லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்கு, 2019 ஆம் ஆண்டு அரச வளங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைதாகியுள்ளார்.

உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், புதுப்பித்தலுக்காக – அரச பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர்களைப் பயன்படுத்தியதாகவும், அரசுக்குச் சொந்தமான பொருட்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தியதாகவும் விஜேதாச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


