
ஹமாஸ் வசமிருந்த பணயக்கைதிகளில், உயிரிழந்தவர்களின் 09 பேரின் உடல்கள் மட்டுமே – இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளிலிருந்து மற்றைய உடல்களை மீட்டெடுக்க விசேட உபகரணங்கள் தேவை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பிணைக்கைதிகள் விவகாரத்தில் சமரசத்திற்கு இடமில்லை என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
மேலும், உயிரிழந்த 28 கைதிகளின் உடல்களையும் திருப்பி அனுப்பும் வரை, காஸா அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான, எந்த முன்னேற்றமும் இருக்காது என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.
ஆயினும், உடல்களை மீட்க முடியாமல் போவது – ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதாக ஆகாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் – இஸ்ரேலிய ராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ள காஸா பகுதிகளில், இஸ்ரேல் ராணுவம் – பொதுமக்களைக் கொல்வதாக, ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனமொன்று குற்றம் சாட்டியுள்ளது.


