தலைப்புச் செய்திகள்

வாகன இறக்குமதிக்காக இவ்வருடம் 08 மாதங்களில் 1007.5 மில்லியன் டொலர் செலவு

வாகன இறக்குமதிக்காக, இந்த வருடம் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை, 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து, இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஓகஸ்ட் 2025க்கான வெளித்துறை செயல்திறன் அறிக்கையில் இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்கான அதிகபட்ச மாதாந்த செலவாக 255.7 மில்லியன் டொலர் – ஓகஸ்ட் 2025 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான மாதாந்தம் செலவிடப்பட்ட தொகை பின்வருமாறு;

ஜனவரி – 29.1 டொலர்
பிப்ரவரி – 22.3 டொலர்
மார்ச் – 54.0 டொலர்
ஏப்ரல் – 145.6 டொலர்
மே – 125.2 டொலர்
ஜூன் – 169.6 டொலர்
ஜூலை – 206.0 டொலர்
ஓகஸ்ட் – 25 டொலர்