தலைப்புச் செய்திகள்

பிரிட்டன், கனடா, அவுஸ்ரேலியா, போர்த்துகல் ஆகியவை, பலஸ்தீனை நாடாக அங்கீகரித்தமைக்கு கத்தார் வரவேற்பு

பிரிட்டன், கனடா, அவுஸ்ரேலியா மற்றும் போர்த்துகல் ஆகிய நாடுகள், பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்தமையை, கத்தார் வரவேற்றுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் நீடித்த அமைதியை அடைவதற்கான முயற்சிகளை ஆதரவளிப்பவை எனவும் கூறியுள்ளது.

மேலும், ஏனைய நாடுகளும் சர்வதேச சட்டத்திற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென, கட்டார் அழைப்பு விடுத்துள்ளது.

இது இவ்வாறிருக்க, நீண்டகாலமாக முடங்கிப்போன ‘இரு-நாடு தீர்வை’ மீண்டும் கொண்டுவர முயற்சிக்கும் வகையில், பிரான்ஸ் மற்றும் சஊதி அரேபியாவின் ஆதரவுடன் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் உலக உச்சி மாநாடு ஒன்று நடைபெற உள்ளது.

இதன்போது, பலஸ்தீனத்தை இன்றும் பல நாடுகள் அங்கீகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்த உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கும் என்றும், இந்த மாநாடு பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கும் சர்க்கஸ் என்றும், ஐ.நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதுவர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.