
தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த லொறியிலிருந்து பயன்படுத்தப்படாத புதிய கைத்துப்பாக்கிகள் நான்கும் மீட்கப்பட்டுள்ளன.
தகவல் ஒன்றினையடுத்து, இந்த லொறியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
போதைப்பொருள் பொதிக்குள் மேற்படி நான்கு கைத்துப்பாக்கிகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

தொடர்பான செய்தி: தங்காலை வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு; மூவர் மரணம்



