தலைப்புச் செய்திகள்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

மின்சாரக் கட்டணத்தில் 6.8% கட்டண அதிபரிப்பை – இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது என்று, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்காக இலங்கை மின்சாரா சபை சமர்ப்பித்த மின்சார கட்டண திருத்த திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெறவுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் முன்மொழிவுகளையும் எழுத்துப்பூர்வமாக ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் முன்மொழிவுகள் ஒக்டோபர் 07ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

எழுத்து மூலமான கருத்துக்களுக்கு மேலதிகமாக, அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய ஒன்பது பொது ஆலோசனை அமர்வுகளை ஆணைக்குழு நடத்தும் என்றும், இதன்போது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வாய்மொழியாக வெளிப்படுத்த முடியும்.

இந்த வாய்மொழி ரீதியான கருத்துக்கள் இம்மாதம் 18ஆம் திகதி தொடங்கும் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.