
முன்னாள் ஜனாதிபதிகளின் சில சலுகைகளை இல்லாமலாக்கும் சட்டமூலம் அரசியலமைப்புடன் இணங்குவதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சாதாரண பெரும்பான்மையால் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
சபாநாயகர் இன்று (09) உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பை நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தினார்.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி 06 மனுக்கள் – உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதனையடுத்து, ஜனாதிபதிகளின் உரிமைகள் ரத்துச் செய்யும் சட்டமூலத்தை நாளை விவாதிக்க நாடாளுமன்ற அலுவல் குழு முடிவு செய்துள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற அலுவல் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, நாளை காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை விவாதம் நடைபெறும்.



