
நேபாள பிரதமர் கட்கா பிரசாத் சர்மா ஒலி (Khadga Prasad Sharma Oli) பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஊழல் மற்றும் சமூக ஊடகங்கள் தடைசெய்யப்பட்டமைக்கு எதிராக நேற்று (08) திங்கட்கிழமை தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், ஏற்கனவே மூன்று அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.
ஊரடங்கு உத்தரவை மீறி, போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கட்டிடத்திற்கு தீ வைத்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, போராட்டக்காரர்கள் – நாட்டின் மிகப்பெரிய கட்சியான நேபாளி காங்கிரஸின் அலுவலகத்தையும், பல முக்கிய அரசியல்வாதிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டனர்.

இது இவ்வாறிருக்க, நேற்று திங்கட்கிழமை இரவு, சமூக ஊடகங்கள் மீதான தடையை அரசாங்கம் நீக்கியது.
போராட்டங்கள் காரணமாக காத்மண்டு சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டுள்ளதாக, நேபாள சிவில் விமானப் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தொடர்பான செய்தி: நேபாள அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், 14 பேர் உயிரிழப்பு



