
நாட்டில் இந்த ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி தொடக்கம் இம் மாதம் 04ஆம் திகதி வரை நடந்த 1,757 வீதி விபத்துகளில் – மொத்தம் 1,870 பேர் உயிரிழந்துள்ளனர்.
போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட இந்த தகவலை வெளியிட்டார்.
வீதி விபத்துகளால் தினமும் ஏழு முதல் எட்டு பேர் உயிரிழப்பதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட கூறியுள்ளார்.
எனவே – சாரதிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள், பாதசாரிகள் மற்றும் பயணிகள் உட்பட வீதியில் பயணிப்போர் அனைவரும், போக்குவரத்து சட்டங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டதோடு, வீதி சமிக்ஞைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும், விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க சுய ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.



