
பஸ் வண்டியொன்று நேற்று (04) மாலை எலலா-வெல்லவாய பிரதான வீதியில் 24வது கி.மீ. தூணுக்கு அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
தங்காலை நகர சபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியே, இவ்வாறு விபத்துக்குள்ளனது. இறந்தவர்களில் 06 பேர் பெண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 07 பேர் பெண்கள்.. அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி நபர்கள் சுற்றுலா சென்ற பஸ் வண்டியே இவ்வாறு வீதியை விட்டு விலகி 500 மீற்றர் சரிவில் கவிழ்ந்துள்ளது.
சம்பவம் நடந்த போது குறித்த பஸ்ஸில் 30 பேர் இருந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
வீடியோ


