தலைப்புச் செய்திகள்

ரணில் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் மீது போத்தல் வீசித் தாக்கியவர் சிக்கினார்

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காயப்படுத்திய சந்தே நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் வீசிய போத்தலொன்று கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் தலையைக் காயப்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவினர் நடத்திய விசாரணையில், சந்தேக நபர் களுத்துறையில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் மீது காயங்களை ஏற்படுத்தியதாகவும், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நேற்று (27) கைது செய்யப்பட்டு கொம்பனித்தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் களுத்துறை, நாகொடவைச் சேர்ந்த 52 வயதுடைய முன்னாள் நகரசபை உறுப்பினர் ஆவார்.

அவர் இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் உத்தியோகத்தர் மீது – மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டது.