
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துணை பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லானவுக்கு எதிராக – ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று, சுகாதார பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமைக்காவே, இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
டொக்டர் பெல்லான ஊடகங்களுக்கு அளித்த அறிக்கைகள் அதிகாரபூர்வமற்றவை என்றும், இந்த விஷயத்தில் சுகாதார அமைச்சு உள்ளக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாகவும் சுகாதார பிதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



