
இலங்கையில் அதிக சம்பளம் பெறும் தொழில்களில், ஆசிரியத் தொழிலும் ஒன்றாக மாறும் என்று, கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் அலுவலக உதவியாளர்கள் – ஆசிரியர்கள் சில வகையினரை விட அதிக சம்பளம் பெறுகின்றனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கூறியமைக்கு, பதிலளிக்கும் விதமாக – அவர் இதனைக் கூறினார்.

ஆசிரியர்களின் ஆரம்ப சம்பளம் ரூ. 53,000 என்றும், தரம் ஒன்று (Grade One) ஆசிரியர்களின் மொத்த சம்பளம் ரூ. 157,000 என்றும் தெரியவருகிறது.
இருப்பினும், இலங்கை ஆசிரியர்களில் 15 சதவீதத்தினர் மட்டுமே அதிகபட்ச சராசரி சம்பளம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



