தலைப்புச் செய்திகள்

பதிவு செய்யப்பட்ட சமயப் பாடசாலைகளில் கற்பிப்போருக்கு 7500 ரூபாய் கொடுப்பனவு வழங்க தீர்மானம்

பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதங்களுடன் இணைக்கப்பட்ட – பதிவுசெய்யப்பட்ட சமயப் பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொடுப்போருக்கு, ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவு இரண்டையும் உள்ளடக்கிய வருடாந்த கொடுப்பனவாக 7,500 ரூபாயை வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

சமூகத்தை ஆன்மீக வளர்ச்சி நோக்கி வழிநடத்துவதில் மதக் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது என்று அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அவசியமான மதக் கல்வியை ஊக்குவிக்க ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டு முதல், பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க சமயங்களைப் போதிக்கும் – பதிவுசெய்யப்பட்ட சமயப் பாடசாலை ஆசிரியருக்கு, ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவு உட்பட 7,500 ரூபாய் வருடாந்த தொகையை செலுத்த புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.