
இஸ்ரேலில் வீட்டு பராமரிப்புத் துறையில் பணியாற்றுவதற்காக 29 இலங்கைப் பெண் தொழிலாளர்கள் கொண்ட குழுவினர், இம்மாதம் 07 மற்றும் 09ஆம் திகதிகளில் இஸ்ரேலுக்குப் புறப்படவுள்ளனர்.
இவர்களுக்கான விமான டிக்கட்களை வழங்கும் நிகழ்வு நேற்று (04) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டில் இதுவரை, மொத்தம் 379 இலங்கை பராமரிப்பாளர்கள் இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இந்த வேலைவாய்ப்புகள் இலங்கை மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் கிடைத்துள்ளன.
இன்றுவரை இந்த ஒப்பந்தத்தின் கீழ் 2,269 இலங்கையர்கள் இஸ்ரேலின் பராமரிப்புத் துறையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.



