
ஈரானிய மற்றும் யெமன் ஆகியவை பலிஸ்டிக் ஏவுகணைகளை மத்திய இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளன. இதனை ஈரான் மற்றும் இஸ்ரேல் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதேவேளை ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் மேலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஈரான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இஸ்ரேல் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, தெஹ்ரானில் புதிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தும்போது, ஈரானிய பதில் நிறுத்தப்படும் என்று, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி கூறியுள்ளார்.
இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணாக, ஈரானில் ஏராளமானோர் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டுமுள்ளனர் என, ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. இஸ்ரேலில், ஈரான் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 380 பேர் காயமடைந்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, ஈரானிய தாக்குதல்களால் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட சேதம் விரிவானது என்றும், இதற்கு முன்னர் ஏற்படாதது எனவும், அல் ஜசீரா ஊடகவியலாளர் நூர் ஒடே (Nour Odeh) ஜோர்தானிலிருந்து வழங்கிய செய்தியில் தெரிவித்துள்ளார். ஒரு வலிமைமிக்க ராணுவத்தைக் கொண்ட ஒரு நாட்டை இஸ்ரேல் எதிர்கொள்வது இது 1973க்குப் பிறகு இதுவே முதல் முறை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



