
முன்னாள் அமைச்சர் தயா கமகேவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களை ஏலமிடுமமாறு – கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றப் பதிவாளர் மற்றும் பிரதி பிஸ்கால் விடுத்துள்ளஅறிவிப்பின்படி, ஏலம் ஜூலை 02ஆம் திகதி காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
பீப்பிள்ஸ் லீசிங் & ஃபைனான்ஸ் தனியார் நிறுவனம் (People’s Leasing & Finance PLC) சுமார் 104.2 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகையை வசூலிக்க தாக்கல் செய்த வழக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மொத்த நிலுவைத் தொகையான 108.3 மில்லியனில் ரூபாயில், இதுவரை 4.08 மில்லியன் ரூபாய் மட்டுமே பிரதிவாதிகளால் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.
நொவம்பர் 10, 2022 அன்று வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி, மீதமுள்ள நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, இந்த நிறுவனங்கள் ஏலமிடப்படவுள்ளன.
ஏலம் விடப்படவுள்ள நிறுவனங்கள்:
- தயா குரூப் லிமிடெட் (Daya Group Limited)
- தயா அப்பரல் எக்ஸ்போர்ட்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (Daya Apparel Exporters (Private) Limited)
- ஒலிம்பஸ் கன்ஸ்ட்ரக்ஷன் (பிரைவேட்) லிமிடெட் (Olympus Construction (Private) Limited)



