
இஸ்ரேல் முழுவதும் உள்ள இலக்குகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்-இன் தெற்கே உள்ள பாட் யாம் நகரில் நடந்த தாக்குதலில் குறைந்தது 35 பேர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன
ஈரான் முழுவதும் பொதுமக்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை இஸ்ரேலியப் படைகள் குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து, தெஹ்ரானில் உள்ள ஷாஹ்ரான் எண்ணெய் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதன்போது, “ஈரானிய ஆட்சியின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய” இடங்களை குறிவைத்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
கடந்த இரண்டு நாட்களில் ஈரானில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதாகவும், 800 பேர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்டவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவர்.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான விரோதப் போக்கு முடிவுக்கு வர வேண்டும் என்று, தானும் தனது ரஷ்ய நண்பர் விளாடிமிர் புடினும் ஏற்றுக்கொண்டுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்து வரும் போது, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எந்த நியாயமும் இல்லை என்று – ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறிய நிலையில், அமெரிக்காவுடனான ஆறாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையை ஈரான் ரத்து செய்திருந்தது.



