தலைப்புச் செய்திகள்

இஸ்ரேலின் மற்றுமொரு F-35 யுத்த விமானத்தை வீழ்த்தியுள்ளதாக ஈரான் அறிவிப்பு

இஸ்ரேலின் F-35 Lightning II தாக்குதல் ஜெட் விமானம்

ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றொரு இஸ்ரேலிய F-35 போர் விமானத்தை வீழ்த்தியுள்ளதா ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் ஈரானின் மேற்கு பகுதியில் நடந்ததாகவும், இதன்போது விமானி ஜெட் விமானத்திலிருந்து வெளியேறியதாகவும் – ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையை மேற்கோள் காட்டி, IRNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும், விமானி எங்கே எனத் தெரியவில்லை எனவும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, ‘ஈரானிய ராணுவம் – இஸ்ரேலிய போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவதில் வெற்றி பெற்றதாக ஈரானிய ஊடகங்கள் போலி தகவல்களை வெளியிட்டுள்ளது’ என, இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அத்ரே தெரிவித்துள்ளார்.

முன்னரும் இந்த வகை விமானங்களை தாம் தாக்கி வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்திருந்த ஈரான், உலகில் முதன் முதலாக F-35 விமானத்தை தாக்கி வீழ்த்திய முதல் நாடு ஈரான் எனவும் கூறியிருந்தது.