தலைப்புச் செய்திகள்

ஈரானின் ஆயுதப்படைத் தலைமைத் தளபதி, அணு விஞ்ஞானிகள் இருவர், இஸ்ரேலிய தாக்குலில் பலி

மேஜர் ஜெனரல் முகமது பகேரி

ஈரானின் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் முகமது பகேரி, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் இதனை ஈரானின் உத்தியோகபூர்வ செய்தி மறுத்திருந்த போதிலும், தற்போது அவர் படுகொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.

இதேவேளை, ஈரான் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த ஃபெரேடவுன் அப்பாசி, இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பாசி – ஈரானிய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்தார்.

மேலும், இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தின் தலைவரான அணு விஞ்ஞானி முகமது மெஹ்தி தெஹ்ரான்சியும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தெஹ்ரான்சியின் வீடு அமைந்துள்ள கட்டிடமும் – இஸ்ரேலிய தாக்குதலில் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இந்த நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் – சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியிருப்பதாக, சஊதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கொடூரமான தாக்குதல்களை தாங்கள் கண்டிப்பதாகவும் சஊதி அரேபியா கூறியுள்ளது.