தலைப்புச் செய்திகள்

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ராஜிநாமா

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து ராஜினா செய்துள்ளார்.

சிறைச்சாலைகள் பதில் ஆணையாளர் நாயகத்திடம், இதற்கான கடிதத்தை அவர் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மே மாதம் வெசாக் போயா தினத்தில் – ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஒரு கைதி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டமை தொடர்பான தற்போதைய நிலைமையின் கீழ் – இந்த ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிறைச்சாலைகள் திணைக்களத்தை மறுசீரமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாடு முழுவதும் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பதவிகளில் பல மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையர் நாயகம் துஷார உப்புல்தெனிய இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதி அமைச்சின் கூடுதல் செயலாளர் நிஷான் தனசிங்க, சிறைச்சாலைகள் பதில் ஆணையர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், சிறைச்சாலைகள் ஆணையர் ஜகத் வீரசிங்க புதிய சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.