
நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேசிய விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சு இந்த அறிககையை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பின்வரும் காட்டு விலங்குகளின் எண்ணிக்கை தெரியவந்துள்ளது.
டோக் குரங்குகள் (Toque monkeys) – 5.17 மில்லியன்
சாம்பல் நிற லங்கூர்கள் (Gray Langurs) – 1.74 மில்லியன்
ராட்சத அணில் – 2.66 மில்லியன்
மயில்கள் – 4.24 மில்லியன்
விவசாயத் துறைக்கு பாதகத்தை ஏற்படுத்தும், பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை அடையாளம் காண்பதற்காக, நாடு முழுவதும் மார்ச் 15 அன்று, இந்த விலங்குகள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பொதுமக்களுக்கு காலை 8:00 மணி முதல் காலை 8:05 மணி வரை, ஐந்து நிமிட அவகாசம் இதற்காக வழங்கப்பட்டது.



