தலைப்புச் செய்திகள்

முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்திய சுற்றறிக்கை: மேல் மாகாண பிரதம செயலாளர் திரும்பப் பெற்றார்

ரச அலுவலகங்களில் ஊழியர்கள் முகக்கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை மேல் மாகாண பிரதம செயலாளர் திரும்பப் பெற்றுள்ளார்.

இத தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டள்ள பிரதம செயலாளர்; இந்த சுற்றறிக்கை ஆரம்பத்தில் மேல் மாகாண சபை வளாகத்தினுள் பயன்பாட்டுக்காக மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும், இது பொதுவாக இன்ஃப்ளூயன்ஸா போன்ற சுவாச நோய்களின் அதிகரிப்பை கட்டப்படுத்தும் விதமாக இருந்தது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும், மேற்படி சுற்றுநிருபம் பொதுமக்களின் பரந்த கவனத்தைப் பெற்றதாக குறிப்பிட்டள்ள அவர். பலர் இதை ஒரு புதிய கொவிட் 19 தொற்றின் அறிகுறியாக விளங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தவறான விளக்கம் தேவையற்ற எச்சரிக்கைக்கு வழிவகுத்ததாகவும், எனவே குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக – இந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் பிரதம செயலாளர் விபரித்துள்ளார்.

இன்று முன்னதாக, அரச அலுவலக சூழலில் முகக்கவசம் அணிவது – நாடு தழுவிய ரீதியில் கட்டாயமில்லை என்றும் சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியது.