தலைப்புச் செய்திகள்

வயம்ப கல்வியியல் கல்லூரி மாணவியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

யம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை (மே 23) கல்லூரியில் உள்ள தனது விடுதிக்குள்- இரண்டாம் ஆண்டு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மரணம் தொடர்பாக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக அமைதிப் போராட்டம் நடத்தி, கல்லூரியின் ஆசிரியர்கள்தான் மாணவியின் மரணத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கல்லூரியில் சில விரிவுரையாளர்களின் துன்புறுத்தலால் ஏற்பட்ட மன உளைச்சலால் மாணவி இவ்வாற தற்கொலை செய்த கொண்டதாக அவரின் நண்பர்கள் தெரிவித்தள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இறந்த மாணவி கண்டி, தெல்தெனியாவைச் சேர்ந்த 24 வயதுடையவராவார்.

இந்த நிலையில், மாணவியின் மரணம் தொடர்பில் கல்வி அமைச்சும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.