
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க – இன்று (08) காலை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
தேசிய மக்கள் சக்தி கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீர கடந்த மாதம் மரணமடைந்தமையினால் ஏற்பட்ட நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்தை நிரப்பும் வகையில் சமந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கரவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, திடீர் மாரடைப்பு காரணமாக, ஏப்ரல் 06 ஆம் திகதி, தனது 38 வயதில், நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீர காலமானார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் ரம்புக்கனை தொகுதி அமைப்பாளராகப் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த ரணசிங்க, பெறப்பட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்தார்.



