தலைப்புச் செய்திகள்

டெங்கு நோயாளிக்கு சிக்கன்குனியா சிகிச்சை வழங்கப்பட்டால் ஆபத்து: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

சிக்குன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகியவை ஒரே நுளம்பினால் பரவுதால், இவை ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பது பொது சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துருள்ளனர்.

தற்போது அதிக மழை காரணமாக நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, நாடு முழுவதும் இரண்டு வைரஸ்களும் விரைவாக பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

டெங்கு நோயாளிக்கு சிக்குன்குனியா சிகிச்சை தவறாக வழங்கப்பட்டால் உயிருக்கு ஆபத்தானது என்றும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் தொடர்புடைய அறிகுறிகள் ஏற்பட்டுள்ளவர்களுக்கு, சரியான வைத்திய நோயறிதலின் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சரியான நேரத்தில் மற்றும் துல்லியமான சிகிச்சையை உறுதி செய்வதற்காக, சுய வைத்தியம் செய்வதற்குப் பதிலாக, உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறும் பொதுமக்களை சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.