தலைப்புச் செய்திகள்

பெற்றோல் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் நள்ளிரவு குறைகின்றன

எரிபொருள் விலைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை லீட்டருக்கு 06 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 293 ரூபாய். ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை லீட்டருக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 341 ரூபாய்.

மேலும் ஓட்டோ டீசல் லீட்டருக்கு 12 குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 274 ரூபாய். சுப்பர் டீசல் – லீட்டருக்கு 06 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 325 ரூபாயாகும். மண்ணெண்ணெய் விலை – லீட்டருக்கு 05 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 178 ரூபாய்.