
லஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் – அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டது.
லஞ்சம் வாங்கியமைக்கு உதவிய குற்றச்சாட்டில் மார்ச் 26ஆம் திகதியன்று வியாழேந்திரன் கைது செய்யப்பட்டார்.
லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.



