தலைப்புச் செய்திகள்

‘பொலிஸ் திருடன்’ கைது

ல்பொருள் அங்காடி (Supermarket) ஒன்றிலிருந்து 650 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸ் உதவிப் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேராதனை – கிரிபத்கும்புர பகுதியில் உள்ள – ஒரு பல்பொருள் அங்காடியில் இந்த திருட்டில் ஈடுபட்ட மேற்படி பொலிஸ் அதிகாரி, பேராதனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்பொருள் அங்காடியிலிருந்து பல்வேறு பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த சந்தேக நபர், ஒரு தேநீர் தூள் பாக்கெட் மற்றும் ஒரு சிறிய ஷாம்பு பாட்டிலைத் திருடி, அவற்றைப் பையில் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது பல்பொருள் அங்காடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து பல்பொருள் அங்காடியிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரியை பரிசோதனை செய்த போது – திருட்டு உறுதியானது. அதன் பின்னர் திருடப்பட்ட பொருட்களுடன் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேக நபர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற எதிர்பார்க்கப்படும் ஒருவர் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.