
‘அரகலய’ போராட்டத்தின் தொடர்ச்சியாக 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் போது, தங்கள் வீடுகள் எரிக்கப்பட்டதாகக் கூறி – நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை 122.41 கோடி ரூபாய் எனவும் அவர் கூறினார்.
இவர்களில், கெஹெலிய ரம்புக்வெல்ல 959 மில்லியன் ரூபாயை பெற்றுள்ளார். இவருக்கே அதிக தொகை வழங்கப்பட்டுள்ளது. ஜொன்ஸ்டன் பெனாண்டோ 934 மில்லியன் ரூபாய், காமினி லொக்குகே 749 மில்லியன் ரூபாய், அலி சப்ரி ரஹீம் 709 மில்லியன் ரூபாய் மற்றும் நிமல் லான்சா 692 மில்லியன் ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக பெற்றுள்ளனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாடு – வங்குரோத்து நிலையில் இருந்த போது – இவ்வாறு பெருந்தொகைப்பணம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்ற இழப்பீட்டின் முழு விவரம்
- கபில நுவன் அத்துகோரள – ரூ. 504,000
- விமலவீர திசாநாயக்க – ரூ. 550,000
- கீதா குமாரசிங்க – ரூ. 972,000
- ஜனக திஸ்ஸகுட்டிஆராச்சி – ரூ. 1,143,000
- குணபால ரத்னசேகர – ரூ. 1,412,780
- பிரேம்நாத் சி. தொலவத்த – 23 லட்சம் ரூபா
- பிரியங்கர ஜயரத்ன – ரூ. 2,348,000
- சம்பத் அத்துகோரள – ரூ. 2,540,610
- ஜயந்த கெடகொட – ரூ. 2,814,800
- விமல் வீரவன்ச – ரூ. 2,954,000
- பேராசிரியர் சன்ன ஜயசுமன – ரூ. 3,334,000
- அகில எல்லாவல – ரூ. 3,554,250
- சமல் ராஜபக்ஷ – ரூ. 6,539,374
- சந்திம வீரக்கொடி – ரூ. 6,948,800
- அஷோக பிரியந்த – ரூ. 7,295,000
- சமன் பிரிய ஹேரத் – 105.2 லட்சம் ரூபாய்
- ஜனக பண்டார தென்னகோன் – 105.5 லட்சம் ரூபாய்
- ரோஹித அபேகுணவர்தன – 116.4 லட்சம் ரூபாய்
- விசேட வைத்தியர் கீதா அம்பேபொல – 137.8 லட்சம் ரூபா
- சஹன் பிரதீப் – 171.3 லட்சம் ரூபா
- செஹான் சேமசிங்க – 185.1 லட்சம் ரூபா
- இந்திக்க அநுருத்த – 195.5 லட்சம் ரூபா
- மிலான் ஜயதிலக – 223 லட்சம் ரூபா
- வைத்தியர் ரமேஷ் பத்திரன – 281 லட்சம் ரூபா
- துமிந்த திசாநாயக்க – 288 லட்சம் ரூபா
- கனக ஹேரத் – 292 லட்சம் ரூபா
- டீ.பி.ஹேரத் – 321 லட்சம் ரூபா
- பிரசன்ன ரணவீர – 327 லட்சம் ரூபா
- டபிள்யு டீ.வீரசிங்க – 372 லட்சம் ரூபா
- ஷாந்த பண்டார – 391 லட்சம் ரூபா
- எஸ்.எம்.சந்திரசேன – 438 லட்சம் ரூபா
- சனத் நிஷாந்த – 427 லட்சம் ரூபா
- சிரிபால கம்லத் – 509 லட்சம் ரூபா
- அருந்திக்க பெர்னாண்டோ – 552 லட்சம் ரூபா
- சுமித் உடுக்கும்புர – 559 லட்சம் ரூபா
- பிரசன்ன ரணதுங்க – 561 லட்சம் ரூபா
- கோகிலா குணவர்தன – 587 லட்சம் ரூபா
- மொஹான் பீ டி சில்வா – 601 லட்சம் ரூபா
- நிமல் லன்சா – 692 லட்சம் ரூபா
- அலி சப்ரி ரஹீம் – 709 லட்சம் ரூபா
- காமினி லொக்குகே – 749 லட்சம் ரூபா
- ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ – 934 லட்சம் ரூபா
- கெஹெலிய ரம்புக்வெல்ல – 959 லட்சம் ரூபா
இதையும் பாருங்கள்



