தலைப்புச் செய்திகள்

ரஷ்யா சார்பில் உக்ரைனுக்கு எதிரான போரில் களமிறங்கிய 554 இலங்கையர்களில் 59 பேர் மரணம்

ஷ்ய ராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைக்கப்பட்டு உக்ரைன் நாட்டுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இவர்களில் 59 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்படி நபர்கள் இறந்துள்ளமையை இலங்கை தூதரகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், மேலும் தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ரஷ்ய – உக்ரைன் போரில், ரஷ்யா சார்பாக இவ்வாறு களமிறங்கி சண்டையிடும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த விடயத்தில் ரஷ்ய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் பாருங்கள்