
அரிசி, பருப்பு, பேரீச்சம்பழம் உள்ளிட்ட 1.5 மில்லியன் கிலோகிராம் உணவு, காலாவதியாகி – நுகர்வுக்கு தகுதியற்ற நிலையில், உணவு ஆணையாளர் திணைக்களத்தின் கீழுள்ள வெயங்கொட களஞ்சிய வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றமை தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் உலக உணவுத் திட்டத்திலிருந்து (WFP) பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கிடையே விநியோகிப்பதற்காக – உதவியாகப் பெறப்பட்ட உணவு, சரியான நேரத்தில் விநியோகிக்கப்படாததால், அவை இவ்வாறு வீணாகியுள்ளது.
16 களஞ்சியஞ்களைக் கொண்ட வெயங்கொட தானியக் கிடங்கில் அரசுக்குரிய உணவுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று களஞ்சியங்களில் உலக உணவுத் திட்டத்தின் காலாவதியான உணவுகள் உள்ளன. கஜகஸ்தான் மற்றும் அவுஸ்ரேலியாவிலிருந்து பெறப்பட்ட இந்த உணவுகள், தவறான முகாமைத்துவம் காரணமாக வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதியமைச்சர் முகமது முனீர், நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம மற்றும் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு இன்று (2) ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த விடயம் வெளிக் கொண்டு வரப்பட்டது.
இதையும் பாருங்கள்



