
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவியில் இருந்து ரமல் சிறிவர்தன ராஜினாமா செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிறுவனத் தலைவர்கள் இருவர் இரண்டு மாதங்களில் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.
கடந்த மாதம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை டொக்டர் செனேஷ் பண்டார ராஜினாமா செய்தார்.
தனது ராஜிநாமாவுக்கான தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, சில நாட்களுக்கு முன்பு அமைச்சரிடம் ரமல் சிறிவர்தன தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
2024 ஒக்டோபரில் அப்போதைய போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத்தினால் மீண்டும் நியமிக்கப்பட்ட ரமல் சிறிவர்தன,இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக நான்காவது முறையாக பதவியேற்றார்.
சந்திரிகா பண்டாரநாயக்க (1994-2001), மஹிந்த ராஜபக்ஷ (2006-2007) மற்றும் மைத்திரிபால சிறிசேன (2015-2019) ஆகிய ஜனாதிபதிகளின் ஆட்சியிலும் ரமல் சிறிவர்தன முன்னர் தலைவராக பணியாற்றினார்.
இதையும் பாருங்கள்



